இலங்கையில் மேலும் புதிய 1000 தேசிய பாடசாலைகள்
தேசிய பாடசாலைகளை 1000 வரை அதிகரித்தல் அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கி புதிய 1000 தேசிய பாடசாலைகளை உருவாக்குவதற்காக பொருத்தமான வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காக அமைச்சரவை 2019 டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியாக அங்கீகாரம் வழங்கியுள்ளது .
அதற்கமைய , மூன்று கட்டங்களாகக் குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் ,
முதலாம் கட்டமாக தற்போது எந்தவொரு தேசிய பாடசாலையும் இல்லாத பிரதேச செயலகப் பிரிவுகள் 123 இல் ஒரு மாகாணசபை பாடசாலை வீதம் தெரிவு செய்து தேசிய பாடசாலையாக அபிவிருத்தி செய்வதற்கும்,
இரண்டாம் கட்டமாக அடையாளம் காணப்படும். அளவுகோல்களுக்கமைய தெரிவு செய்யப்படும் 673 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக உயர்த்துவதற்கும்,
மூன்றாம் கட்டமாக தற்போதுள்ள 373 தேசிய பாடசாலைகளை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் ஏற்புடைய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது .
