அடுத்த வருடம் கனடா 401000 குடியேற்ற வீசா வழங்கவுள்ளது


அடுத்த வருடம் கனடா 401000 குடியேற்ற வீசா வழங்கவுள்ளது


அடுத்த வருடம் கனடா 401000 குடியேற்ற வீசா வழங்கவுள்ளது

அடுத்த மூன்று ஆண்டுகளில் அதிகளவான  புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்வதை கனடா நோக்கமாகக் கொண்டுள்ளது.அத்துடன் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் கனடாவில் உள்ள சர்வதேச மாணவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கப்படும் என கூறப்படுகின்றது

2021 ஆம் ஆண்டு 401000 நிரந்தர குடியேற்றக்காகரர்களை கனடா வரவேற்கும்.இது கடந்த இலக்கான  351000 விடவும் அதிகமாக காணப்படும். 2022ஆம் ஆண்டுக்கு முந்தைய 361000 லிருந்து  411000 ஆகு அதிகரிக்கப்படும்.அத்துடன் 2023 ஆம் ஆண்டு அது 421000 ஆக காணப்படும்.

எல்லைகள் மூடப்பட்டுள்ளமை வீசா அலுவலகங்கள் மூடுப்பட்டமை தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் மற்றும் சேவையில் காணப்படும் வரையறுக்கப்பட்ட சில சர்வதேச விமான சேவைகள் போன்றவற்றினால் இவ்வருடத்திற்கான 341000 பேரில் ஒரு பகுதி நிரந்தர குடியேற்றகாரர்களை மாத்திரமே கனடா வரவேற்க உள்ளது.

கனடாவில் தற்போது சில சர்வதேச தொழிலாளர்களுக்கு நிரந்தர பிரஜாவுரிமை வழங்கப்படுகின்றது.வழமையான வீசா காலாவதியாகும் போது தொழிலாளர்கள் அவர்களது தாய்நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

கனடாவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களும் நிரந்தர வதிவிட விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்

தமது எல்லைக்குள் காணப்படும் அனுபவம் மற்றும் திறமைகளை அடையாளம் காண்பதற்காக தனித்துவமான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக கனேடிய குடிவரவு அமைச்சர் மெக்ரோ மென்டிசினோ நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவிற்கு திறமையான தகுதி வாய்ந்த தொழிலாளர்களை உள்ளீர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்

சுகாதாரம் முதல் வர்த்தக துறையில் திறமையானவர்கள் நீண்டகால நல மற்றும் தொழிநுட் துறைகளில் காணப்படும் குடியேற்றகாரர்களின் தொழில் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பெரும்பாலான நிரந்தர சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

நீண்ட கால நல திட்டம் மற்றும் சுகாதாரத் துறைகளில் அழுத்தத்தை கொண்டிருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமையை அரசாங்கம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.