நாசா வெளியிட்டுள்ள இலங்கையின் அழகான புகைப்படம்

 நாசா வெளியிட்டுள்ள இலங்கையின் அழகான புகைப்படம்

நாசா வெளியிட்டுள்ள இலங்கையின் அழகான புகைப்படம்


இலங்கை மற்றும் இந்தியாவின் தெற்கு முனை தென்படும் விதமாக அழகான ஒளிபடமொன்றை சர்வதேசவிண்வெளி நிலையத்திலிருந்து  நாசா வெளியிட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஆடி மாதம் 24ஆம் திகதி, விண்வெளி வீரர்களான பெஹன்கென் மற்றும் டக் ஹர்லி ஆகியோரால் எடுக்கப்பட்ட ஒளிபடங்களை நாசா வெளியிட்டு இருந்தது.

அந்த புகைப்படத்தில் இலங்கை மற்றும் இந்தியாவின் பிரகாசமான ஒளிரும் தெற்கு முனையும் காட்டப்பட்டுள்ளன. மேலும் பொப் பெஹன்கென் மற்றும் டக் ஹர்லி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரண்டு மாதங்கள் கழித்த பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பூமியை வந்தடைந்தனர்.

இதேவேளை நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் என்ற விண்வெளி ஆய்வு நிறுவனம், ஏற்கனவே மற்றொரு குழுவினரை அடுத்த மாதம் சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tags